Read in English: Cervicogenic Headache — in English
Video Description
தலைவலிக்கும் physiotherapy-க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனா, கழுத்து தசைகள் இறுக்கமாகும்போது (neck muscle tightness) பல பேருக்கு தலைவலி வருவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. இதை cervicogenic headache என்கிறோம்.
சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் பின் தலையில், சிலருக்கு வேலை தொடங்கிய பிறகு, சிலருக்கு நெற்றி அல்லது நடு தலையில் வலி வரும். பொதுவான காரணம் — posture, அதாவது கழுத்தை எப்படி வைத்திருக்கிறோம் என்பது.
இந்தப் பக்கத்தில்: கழுத்து ஏன் தலைவலியை உண்டாக்குகிறது, யாருக்கு வருகிறது, வீட்டிலேயே செய்யக்கூடிய மாற்றங்கள், மற்றும் physiotherapy எப்படி உதவும் என்பதைப் பார்க்கலாம்.
கழுத்து ஏன் தலைவலியை உண்டாக்குகிறது
கழுத்து தசைகள் பின் தலை வரை இணைந்திருக்கின்றன. எனவே கழுத்தில் தொடர்ந்து இருக்கும் tension தலைவலியாக உணரப்படுகிறது. இது எல்லா வயதினருக்கும் வரலாம்:
- நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் மற்றும் சிறு குழந்தைகள்
- நீண்ட நேரம் screen முன் desk work செய்பவர்கள் — கழுத்து மற்றும் மேல் தோள்பட்டை stiff ஆகிறது
- 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்பே கவனிக்காத கழுத்து பிரச்சனையால் தசைகள் பலவீனமாகி இருப்பவர்கள்
- Mobile phone-ஐ அதிக நேரம் பயன்படுத்துவது — screen time மற்றும் கழுத்தின் position
வீட்டில் செய்யக்கூடியவை
- அரை மணி நேர screen வேலை / படிப்பு / phone பயன்பாட்டுக்கு ஒரு முறை break எடுத்து, மேலேயும் பக்கவாட்டிலும் பார்த்து கழுத்தை அசைக்கவும்
- கழுத்தை முன்னால் தள்ளாமல், உடலுடன் alignment-ல் வைக்கவும்
- குப்புற படுக்காமல் நேராகவோ அல்லது side-ஆகவோ படுப்பது — கழுத்தின் இயற்கையான curve தக்கவைக்கப்படும்
- அதிகமான அல்லது மிக உயரமான pillow-ஐ தவிர்ப்பது
Physiotherapy எப்படி உதவும்
Posture correction physiotherapy management-ல் ஒரு தனிப் பகுதி. அதனுடன், neck physiotherapy-ல் கழுத்து தசைகளுக்கு strengthening மற்றும் stretching exercises கொடுக்கப்படும். கழுத்து தசைகள் நன்றாக வேலை செய்யும்போது, கழுத்து tension-னால் வரும் தலைவலி பல நேரங்களில் குறையும்.
Assessment-க்கு
தலைவலி கழுத்திலிருந்து தொடங்குகிறதா என்பதை ஒரு assessment மூலம் தெரிந்துகொள்ளலாம். எங்கள் neck pain physiotherapy பற்றி மேலும் அறியலாம், அல்லது அழைக்கவும்.
Chennai Physio Care® — Anna Nagar West, Chennai
📞 73052 74514
🕐 Monday – Saturday, 8:30 AM – 7:00 PM
அண்ணா நகர், கில்பாக், மொகப்பேர், அரும்பாக்கம், கோயம்பேடு, கொரட்டூர் பகுதிகளில் home visit வசதி உண்டு. உங்கள் நிலைமைக்கு home visit பொருத்தமா என்பதை பேச எங்களை அழைக்கவும்.
Last reviewed by Dr. N Vanathy, PT — July 2026 Chennai Physio Care®, Anna Nagar West, Chennai